83 நாட்களில் 1000 பதிவுகள்!

Wednesday, May 9, 2007

சற்றுமுன்-1000

2007 பிப்ரவரி 15 ம் நாள் சிறில் அலெக்ஸ் முயற்சியில் பாஸ்டன் பாலா ஆலோசனையுடன் சற்றுமுன் என்ற சூடானசெய்திகளைத் தரும் வலைப்பூ ஆரம்பிக்கப் பட்டது.

சூடான தலைப்புச் செய்திகளை தருவதற்கென்று உருவாக்கப் பட்ட இந்த தளத்தில் வெகு விரைவில் 20 உறுப்பினர்கள் பல்வேறு கண்டங்களில் இருந்து தன்னார்வ செய்தியாளர்களாக இணைந்து வலிமையான கூட்டுப் பதிவாக உருவாக்கி உலகத்தின் செய்திகளை சுடச்சுடத் தந்து பலருக்கு செய்தி என்றாலே சற்றுமுன் என்ற நிலையை வெகு விரைவாக அடைய உதவினார்கள்.

சற்றுமுன் உருவாகி சரியாக 83 ஆவது நாள் மே 8 அன்று 1000ஆவது பதிவு இடுகை இடப்பட்டு மாபெரும் சாதனைக்குரிய பதிவாக மாறிவிட்டது. சற்றுமுன்னின் இந்த தொடரும் பயணத்தில் 1000ஆவது பதிவு நினைவுக் கொண்டாட்டமாக மாபெரும் விமர்சனப் போட்டி ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது. வலைப்பதிவர்களும் வலைப்பதிவுக்கு வெளியே இணையத்தில் பங்களிப்பவர்களும் பங்கேற்கும் வகையில் இந்த மாபெரும் செய்தி விமர்சனப் போட்டி தீர்மானிக்கப் பட்டுள்ளது.

சற்றுமுன்னின் இந்த தொடரும் பயணத்தில் சிறில் அலெக்ஸ் தளநிர்வாகியாக சிறப்புற ஒருங்கிணைக்கிறார். தள வடிவமைப்பை சிந்தாநதி கவனித்துக் கொள்ள உலகெங்கிலும் இருந்து இணைந்துள்ள சக வலைப்பதிவர்களான பாஸ்டன் பாலா, சிவபாலன், மணியன், கவிதா, அதிரை புதியவன், மணிகண்டன், ரவிசங்கர், முத்துகுமரன், கோவி.கண்ணன், பாலபாரதி, ஆசிப் மீரான், பொன்ஸ், பெருசு, ராதா ஸ்ரீராம், துளசிகோபால், விக்கி, திரு ஆகியோர் செய்திகளை ஒருங்கிணைக்கின்றனர்.

இத்தனைப் பேரின் கூட்டு முயற்சியில் கூட்டுறவில் உருவாகி வளர்ந்துள்ள இந்த செய்தித் தளம் இன்னும் பல சிறப்புக்களை பெற்று மேலும் முன்னேறும் என்ற நம்பிக்கையோடு சற்றுமுன் நடத்தும் போட்டிகளின் ஒருங்கிணைப்புக்காக இந்த சற்றுமுன்1000 வலைப்பதிவு வெளியிடப் படுகிறது.

3 comments:

Sundar Padmanaban said...

மனமார்ந்த வாழ்த்துகள்! தனித்துவம் பெற்று சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.

rv said...

வாழ்த்துகள் சற்றுமுன் குழுவினருக்கு.

ப்ரேக்கிங் நியுஸ் மட்டுமே அல்லாமல்..

in depth அனாலிஸிஸ் மற்றும் ரிப்போர்ட்களும் அளிக்கலாம்.. வீக்லி டைஜஸ்ட் போல... பலர் இருப்பதால் தொய்வு இல்லாமல் இதைச் செய்ய இயலும் என்றுதான் தோன்றுகிறது.

பல்வேறு நாடுகளிலிருந்து பதியும் பதிவர்களை உள்ளடக்கியிருப்பதால், உள்நாட்டு செய்திகளை தனித்து வகைப்படுத்தலாம்...

நன்றி.

சற்றுமுன்... said...

முகமூடி said...
// செய்தி என்றாலே சற்றுமுன் என்ற நிலையை //

யோவ்.. இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியில...


(The comment has been edited)